கரூர் மாவட்டத்தில் 1,897 இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 8 May 2022 10:21 PM IST (Updated: 8 May 2022 10:21 PM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் 1,897 இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கரூர்,
தடுப்பூசி முகாம்
கரூர் தாந்தோணிமலைபட்டி ஊராட்சி ஒன்றிய ெதாடக்கப்பள்ளி, பசுபதிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, புலியூர் கவுண்டம்பாளையம் தாந்தோணி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் கொரோனா 4-வது அலை பரவுவதை தடுக்கும் வகையில் நடைபெற்று வரும் 29-வது மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமினை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டார். 
அப்போது அவர் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சம் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவித்ததையொட்டி நேற்று 29-வது மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் 1,897 இடங்களில் நடைபெறுகின்றன. நமது மாவட்டத்தை பொறுத்தவரை 11 லட்சத்து 58 ஆயிரத்து 303 மக்கள் தொகையில் கடந்த 6-ந்தேதி வரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 8 லட்சத்து 17 ஆயிரத்து 446 பேர். இது 96 சதவீதமாகும். 
சிறப்பாக ஏற்பாடு
2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 7 லட்சத்து 690 பேர். இது 82 சதவீதமாகும். இந்த முகாமில் 607 செவிலியர்கள், 1,214 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சத்துணவு பணியாளர்களும், 607 சுயஉதவிக்குழுவினர்களும் மற்றும் 1,214 ஆசிரியர்களும் பணியமர்த்தப்பட்டு முகாம் நடைபெற சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
 இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நொய்யல்
நொய்யல் ஈவேரா பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி, வேட்டமங்கலம் அரசு தொடக்கப்பள்ளி, தவிட்டுபாளையம் அரசு நடுநிலைப்பள்ளி  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மெகா கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் அனிதா தலைமையில் சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கொண்ட குழுவினர் முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி போட்டனர். கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று முகாமில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு தடுப்பூசி போட்டனர்.

Next Story