பெண் ஊர்க்காவல் படை வீரர் மர்ம சாவு
கடலூரில் பெண் ஊர்க்காவல் படை வீரர் மர்ம சாவு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலூர்,
புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் மகள் வினிதா (வயது 26). இவருக்கும் கடலூர் கூத்தப்பாக்கத்தை சேர்ந்த சுகுமார் என்பவருக்கும் கடந்த 5½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 4 வயதில் வர்ஷா என்ற மகள் உள்ளார். வினிதா, கடலூர் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வந்தார்.
தொழிலாளியான சுகுமார் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் தினசரி மது குடித்து விட்டு வந்ததாக தெரிகிறது. மேலும் அவர் வினிதாவிடம் மது குடிக்க பணம் கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
போலீசில் புகார்
இந்த நிலையில் சம்பவத்தன்று சுகுமார், ஜெய்சங்கரை செல்போனில் தொடர்பு கொண்டு உங்கள் மகள் மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜெய்சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் பதறியடித்துக்கொண்டு வந்தனர். பின்னர் வினிதாவின் உடலை பார்த்த போது மின்சாரம் தாக்கி இறந்ததற்கான எந்த ஒரு அடையாளமும் இல்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜெய்சங்கர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story