கிணற்றில் மூழ்கி வாலிபர் சாவு


கிணற்றில் மூழ்கி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 8 May 2022 10:50 PM IST (Updated: 8 May 2022 10:50 PM IST)
t-max-icont-min-icon

ஆற்காடு அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார்.

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த கீழ்விஷாரம் மார்க்கபந்து நகர் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் பிரசாந்த் (வயது 19). இவர் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரை தேடினர். அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றின் அருகே பிரசாந்த் அணிந்திருந்த துணிகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இதனால் சந்தேகமடைந்த பழனி ஆற்காடு தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் தேடி பிரசாந்தை பிணமாக மீட்டனர்.

மேலும் இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Next Story