சோளிங்கரில் 140 இடங்களில் கொரேனா தடுப்பூசி முகாம் நடந்தது
சோளிங்கரில் 140 இடங்களில் கொரேனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமில் சான்றிதழ் வழங்கப்பட்டது.
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் ஏற்கனவே தடுப்பு ஊசி செலுத்தி சான்றிதழ் வராதவர்களுக்கு சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. சோளிங்கர் பகுதியில் 140-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர். தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். தடுப்பூசி முகாம்களை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
அப்போது வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை கேட்டறிந்து தடுப்பூசி செலுத்த வேண்டும். ஏற்கனவே தடுப்பு ஊசி செலுத்தி சான்றிதழ் வராதவர்களுக்கு சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்தார். மேலும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் மணிமாறன், வட்டார மருத்துவ அலுவலர் கோபிநாத், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோகன், சோளிங்கர் தாசில்தார் வெற்றி குமார், கிராம நிர்வாக அலுவலர் கணேஷ், சோளிங்கர் நகராட்சி ஆணையர் பரந்தாமன், துப்புரவு ஆய்வாளர் வடிவேல் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story