வயலோகம் புனித அடைக்கல அன்னை ஆலய தேர்பவனி
புனித அடைக்கல அன்னை ஆலய தேர்பவனி நடைபெற்றது.
அன்னவாசல்:
அன்னவாசல் அருகே வயலோகத்தில் புனித அடைக்கல அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு பங்குத்தந்தைகள் கலந்துகொண்டு திருப்பலி நிறைவேற்றினர். விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்குதந்தை தேவராஜ் கலந்துகொண்டு திருவிழாவையொட்டி சிறப்பு கூட்டுத்திருப்பலி நிறைவேற்றினார்.
இதனைதொடர்ந்து நள்ளிரவில் வண்ண மலர் தோரணங்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஏசு, சூசையப்பர், புனித அடைக்கல அன்னை ஆகிய சொரூபங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த 3 தேர்களும் ஊரின் முக்கிய பகுதிகளின் வழியாக பவனி வந்தன.
இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து பங்குத்தந்தை தேவராஜ் கலந்து கொண்டு திருவிழா நிறைவு திருப்பலியாற்றினார். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள், அன்னதானம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஆடம்பர திருப்பலியும் கொடியிறக்கமும் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story