அங்கன்வாடி மையத்தில் ஒனறியக்குழு தலைவர் ஆய்வு


அங்கன்வாடி மையத்தில் ஒனறியக்குழு தலைவர் ஆய்வு
x
தினத்தந்தி 8 May 2022 11:07 PM IST (Updated: 8 May 2022 11:07 PM IST)
t-max-icont-min-icon

ஆற்காடு அருகே அங்கன்வாடி மையத்தில் ஒனறியக்குழு தலைவர் ஆய்வு செய்தார்.

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியம் சாத்தூர் கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இதில் பாழடைந்த கட்டிடம் உள்ளது. அதனை பார்வையிடுவதற்காக ஆற்காடு ஒன்றிய குழுத்தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அங்கிருந்த அங்கன்வாடி மையத்தில் இருந்த பிள்ளைகள் அவர்களுக்கு அளிக்கப்படும் உணவு குறித்து கேட்டறிந்தார்.பின்னர் பிள்ளைகளுக்கு கல்வி கற்கும் முறை குறித்து கேட்டறிந்தார். மேலும் பிள்ளைகள் புரிந்து கொள்ளும் வகையில் பாடங்களை கற்பிக்க கேட்டுக்கொண்டார்.

Next Story