தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா, வெட்டன்விடுதி அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ளது மனியாரம்பட்டி கிராமம். இங்கு மின்சார கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிறிஸ்டி, ஆலங்குடி, புதுக்கோட்டை.
ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
புதுக்கோட்டை மாவட்டம், தேவர்பட்டி கிராமத்தில் ஏராளமன பொதுமக்கள் வசித்து வருகி்ன்றனர். இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரப்பி பொதுமக்களுக்கு குழாய் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்து எப்போது வேண்டுமாலும் கீழே விழுந்து உயிர் சேதம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மெய்யப்பன், தேவர்பட்டி, புதுக்கோட்டை
Related Tags :
Next Story