ஏம்பல் முத்தையா சாமி கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்
ஏம்பல் முத்தையா சாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அரிமளம்:
அரிமளம் ஒன்றியம், ஏம்பல் கிராமத்தில் முத்தையா சாமி மற்றும் நாட்டு பிள்ளையார் கோவில், வடகரை முருகன் கோவில், மளுவன் கோவில் ஆகிய கோவில்கள் பல லட்சம் ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்டு புனரமைப்பு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவையொட்டி கோவிலில் அனுக்ஞை பூஜையுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து 6 கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கொண்டு கோவிலை சுற்றி வலம் வந்தனர். பின்னர் முத்தையா சாமி கோவில் மூலஸ்தான விமானம் உள்பட பல்வேறு சுவாமிகளின் மூலஸ்தான விமானங்களில் உள்ள கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் முத்தையா சுவாமி ரத பவனி நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி வள்ளி திருமண நாடகம் நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏம்பல் நாடார்கள் நகரத்தார்கள் மற்றும் கும்பாபிஷேக நிகழ்ச்சி குழுவினர் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story