வேன் மோதி தொழிலாளி பலி
வேன் மோதி தொழிலாளி பலியானார்.
அன்னவாசல்:
புதுக்கோட்டை மாவட்டம், வடவாளம் தெற்கு ராயபட்டியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 45). தொழிலாளி. இவர் அன்னவாசல் அருகே பணம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் அவரது சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பணம்பட்டி தனியார் கல்லூரி அருகே இலுப்பூர்-புதுக்கோட்டை சாலையில் வந்த போது அந்த வழியாக வந்த வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சந்திரசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அன்னவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சந்திரசேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வேன் டிரைவர் அன்னவாசலை சேர்ந்த சீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story