கூத்தபெருமாள் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
கூத்தபெருமாள் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே புளியங்குடி கிராமத்தில் கூத்த பெருமாள் அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா நடை பெற்றது. முன்னதாக யாகசாலை பூஜை நடைபெற்று சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கடம் புறப் பாடாகி கூத்தபெருமாள் அய்யனார் கோவில் பரிவார தெய்வ விமான கோபுர கலசங்களுக்கு அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கூத்தபெருமாள் அய்யனார் சாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள் ளிட்ட 16 வகையான அபிஷேகம் அலங்காரம் தீபாரா தனை பெற்றது. இதில் முதுகுளத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story