அடைக்கல அன்னை ஆலய 291-ம் ஆண்டு திருவிழா


அடைக்கல அன்னை ஆலய  291-ம் ஆண்டு திருவிழா
x
தினத்தந்தி 8 May 2022 11:38 PM IST (Updated: 8 May 2022 11:38 PM IST)
t-max-icont-min-icon

அடைக்கல அன்னை ஆலய 291-ம் ஆண்டு திருவிழா நடைபெற்றது.

கீழப்பழுவூர்
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலாக்குறிச்சி கிராமத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா தலமான அடைக்கல அன்னை திருத்தலத்தின் 291-ம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. வீரமாமுனிவரால் பாடப்பட்ட இக்கோவில் மிகவும் பிரபலமான கோவிலாகும். இதன் திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தவருட திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த 30-ந் தேதி 53 அடி அன்னையின் வெண்கல சிலை திறப்புடன் பங்குத்தந்தை சுவக்கீன் மற்றும் குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி, சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் ஆகியோரால் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று குழந்தை ஞானி தலைமையில் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு இரவு 12 மணி அளவில் சிறப்பு அலங்கார தேரோட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக இழுத்து சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். திருவிழாவை காண மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். இத்திருவிழாவிற்கு என சுமார் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Next Story