தி.மு.க. துணை பொதுச் செயலாளரின் அலுவலக உதவியாளர் மோட்டார் சைக்கிள் திருட்டு


தி.மு.க. துணை பொதுச் செயலாளரின் அலுவலக உதவியாளர் மோட்டார் சைக்கிள் திருட்டு
x
தினத்தந்தி 8 May 2022 11:42 PM IST (Updated: 8 May 2022 11:42 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. துணை பொதுச் செயலாளரின் அலுவலக உதவியாளர் மோட்டார் சைக்கிள் திருடுபோனது.

பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, குரும்பாபாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அறிவுச்செல்வன்(வயது 51). இவர் தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆ.ராசா எம்.பி.யின் அலுவலக உதவியாளர் ஆவார். அறிவுச்செல்வன் தற்போது பெரம்பலூர் புதிய மதனகோபாலபுரத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அறிவுச்செல்வன் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்க சென்றார். பின்னர் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதையடுத்து அவர் மோட்டார் சைக்கிளை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் இதுகுறித்து அறிவுச்செல்வன் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை தேடி வருகின்றனர்.

Next Story