பொய்வழக்கை ரத்து செய்யக்கோரி கிராம மக்கள் தீர்மானம்
பொய்வழக்கை ரத்து செய்யக்கோரி கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.
போகலூர்,
ராமநாதபுரம் அருகே உள்ள தொருவளூரில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி துணை தலைவர் காளீஸ்வரி தலைமை தாங்கினார். கிராம தலைவர் மகாதேவன், செயலாளர் காஜா மொய்தீன் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் பிரியா, சுகாதாரத்துறை காந்திமதி, மின்வாரிய, பொதுப்பணித்துறை, விவசாயத்துறை ஆகிய துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஊராட்சி செயலாளர் முனியசாமி ஊர் தீர்மானங்களை மக்கள் முன்னிலையில் நிறைவேற்றினார். பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் அக்கீம் மற்றும் நகர துணைத் தலைவர் சதீஷ் மாணவர் அமைப்பு செயலாளர் கவின் ராகேஷ் ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் இஸ்மாயில் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் ஊராட்சி தலைவர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story