தீக்காயம் அடைந்த பெண் சாவு


தீக்காயம் அடைந்த பெண் சாவு
x
தினத்தந்தி 8 May 2022 11:54 PM IST (Updated: 8 May 2022 11:54 PM IST)
t-max-icont-min-icon

தீக்காயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பணகுடி:
பணகுடி நெருஞ்சி காலனியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 43), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி பவளஜோதி (30). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சுரேசுக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் உள்ளதாகவும், இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 4-ந் தேதி பலத்த தீ காயங்களுடன் பவளஜோதி, ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார். இதுகுறித்து பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து, தீ விபத்து எப்படி ஏற்பட்டது? என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story