சாக்கோட்டை யூனியன் கூட்டம்
சாக்கோட்டை யூனியன் கூட்டம் நடந்தது.
காரைக்குடி,
சாக்கோட்டை யூனியன் கூட்டம் நடந்தது.
சாலை
சாக்கோட்டை யூனியன் கூட்டம் அதன் தலைவர் சரண்யா செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் கேசவன் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் கார்த்தி, மாவட்ட கவுன்சிலர் ராதா பாலசுப்பிரமணியன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்னுசாமி, என்ஜினீயர் கணேசன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள், அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:- எஸ்.எம்.கே. சொக்கலிங்கம்: திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையோடு காட்டம்மன் கோவில் சாலை வழியாக காரைக்குடியை இணைக்கும் சாலை அமைக்கும் பணிக்கு, மாங்குடி எம்.எல்.ஏ.வின் வேண்டுகோளின்படி ஊராட்சி சாலையை ஊராட்சி ஒன்றிய அனுமதியோடு நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.
நடவடிக்கை
சுப்பிரமணியன்: திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ் சாலையில் புதிதாக அமைந்திருக்கும் ஒருங்கிணைந்த பத்திரப் பதிவு அலுவலகங்களுக்கு பொதுமக்கள் பாதுகாப்போடு சென்று திரும்ப அந்தபகுதியில் அணுகுசாலை அமைக்க வேண்டும். சங்கராபுரம் ஊராட்சி பர்மா காலனி பகுதியில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக இரவில் விளக்குகள் சரிவர எரிவதில்லை. மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகி விடுகின்றன. எனவே அந்த பகுதியில் அதிக திறன் கொண்ட உயர் அழுத்த மின் மாற்றி (டிரான்ஸ்பார்மர்) அமைக்கநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஆணையாளர் கேசவன்: இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டு பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும். அதுமட்டுமல்லாமல் மின்சார வாரியம் சம்பந்தமான உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்துக் களுக்கு உடனடி பதில் பெற அடுத்த கூட்டத்தில் இருந்து மின்சார வாரியத்தின் சார்பாக அதன் அலுவலர்கள் தவறாது ஒன்றியக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்படும். நிதி ஆதாரத்திற்கு ஏற்ப ஒன்றிய குழு உறுப்பினர்கள் கருத்தறிந்து பணிகள் தேர்வு செய்யப்பட்டு வேலைகள் நடைபெறும்.
தீர்மானம்
தலைவர் சரண்யா செந்தில்நாதன்: உறுப்பினர்கள் தெரிவித்த கோரிக்கைகளை கவனமுடன் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் கோடை வெப்ப நிலை அதிகரித்து வருவதால் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தண்ணீர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு உதவ வேண்டுகிறேன்.
சிவகங்கையில் புத்தக கண்காட்சியை சிறப்பாக நடத்தி மாநில அளவிலான சாதனை புரிந்த மாவட்ட கலெக்டருக்கும் சாதனைக்கு துணைநின்ற அதிகாரிகளுக்கும் ஒன்றியக் குழுவின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூட்டம் நடை பெற்றது. பின்னர் கொண்டு வரப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிறை வேற்றப்பட்டன.
Related Tags :
Next Story