அரசு கல்லூரியில் முத்தமிழ் விழா
அரசு கல்லூரியில் முத்தமிழ் விழா நடைபெற்றது.
காரைக்குடி,
காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் தமிழ் உயராய்வு மையத்தின் சார்பாக பவள விழா ஆண்டை முன்னிட்டு முத்தமிழ் விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் பெத்தாலட்சுமி தலைமை தாங்கினார். பேராசிரியர் முருகேசன் வரவேற்றார். புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியின் முதல்வர் திருச்செல்வம் தொடக்க உரையாற்றினார். பட்டிமன்றம் நடைபெற்றது. இசைத்தமிழ் நிகழ்வாக அழகப்பா பல்கலைக்கழக நுண்கலைத்துறை உதவி பயிற்றுனர் சிவராமன் இசைப் பேருரையாற்றினார். துறைத் தலைவர் பேராசிரியர் துரை நன்றி கூறினார். மாணவ- மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சியும், தொடர்ந்து குயில் பாட்டு, நாடகம் நடைபெற்றது. பேராசிரியர் குமார் நன்றி கூறினார். இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story