தொழிலாளிக்கு கத்திக்குத்து
திருமங்கலம் அருகே தொழிலாளிக்கு கத்திக்குத்து விழுந்தது.
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே உள்ள புல்லமுத்தூரை சேர்ந்தவர் கணேசன். இவருடைய பேரக்குழந்தைகளுக்கு காதணி விழா திருமங்கலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. விசேஷ வீட்டிற்கு புல்லமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி முத்து (வயது 50) வந்துள்ளார். இந்த நிலையில் முத்துவின் உறவினர் திருமங்கலம் தமிழ்தாய் நகரைச் சேர்ந்த சதீஷ்பாண்டியும் (35) வந்திருந்தார். இருவரும் பேசி கொண்டிருந்த போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ்பாண்டி கட்டையால் முத்துவை தாக்கினார்.இதை அங்கிருந்தவர்கள் சத்தம் போட்டு இருவரையும் சமாதானப்படுத்தி வெளியே அனுப்பினர். இதையடுத்து தமிழ்தாய் நகரில் உள்ள சதீஷ்பாண்டி வீட்டிற்கு முத்து சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் சதீஷ்பாண்டி முத்துவை கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த முத்து சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story