கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி


கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 9 May 2022 1:02 AM IST (Updated: 9 May 2022 1:02 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலியானார்.

சிவகாசி, 
சிவகாசி அருகே உள்ள மாரனேரி போடுரெட்டியபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமர் (வயது 48). இவரது மகன் இசக்கி நாராயணன் (25). கட்டிட தொழிலாளி.  இவருக்கு திருமணம் ஆகவில்லை. சம்பவத்தன்று குடித்துவிட்டு அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குளித்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராமல் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது தந்தை ராமர் கொடுத்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீயணைப்புத்துறையினர் உதவியுடன் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Tags :
Next Story