வத்திராயிருப்பில் கண்மாய் தலைவர்களுக்கான தேர்தல்


வத்திராயிருப்பில் கண்மாய் தலைவர்களுக்கான தேர்தல்
x
தினத்தந்தி 9 May 2022 1:05 AM IST (Updated: 9 May 2022 1:05 AM IST)
t-max-icont-min-icon

வத்திராயிருப்பில் கண்மாய் தலைவர்களுக்காக நடைபெற்ற தேர்தலில் வரிசையில் நின்று விவசாயிகள் ஆர்வத்துடன் வாக்கு அளித்தனர்.

வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பில்  கண்மாய் தலைவர்களுக்காக நடைபெற்ற தேர்தலில் வரிசையில் நின்று விவசாயிகள் ஆர்வத்துடன் வாக்கு அளித்தனர். 
தலைவர்களுக்கு தேர்தல் 
வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட பிளவக்கல் நீர்த்தேக்க திட்டத்தின் கீழ் உள்ள கண்மாய்களின் நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர் மற்றும் ஆட்சி மண்டலத்தொகுதி உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது. வத்திராயிருப்பு தாலுகாவை பொருத்தவரை மொத்தம் உள்ள 20 சங்கங்களில் 14 சங்கங்களின் தலைவர் மற்றும் மண்டல உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 
மீதமுள்ள 6 சங்கங்களுக்கான தலைவர் மற்றும் மண்டல பொறுப்பாளர்கள் தேர்தல் நடைபெற்றது. 
வாக்கு அளித்தனர் 
இந்த தேர்தலானது வத்திராயிருப்பு பெரியகுளம், விராகசமுத்திரம், கொசவன் குளம், அனுப்பன்குளம், வில்வராயன் குளம், பாதரங்குளம், சித்தாறு, நத்தம்பட்டி உள்ளிட்ட கண்மாய்களுக்கான தேர்தல் கான்சாபுரம், வத்திராயிருப்பு, மகாராஜபுரம், கூமாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் நடைபெற்றது.
இந்த தேர்தல் பொதுத்தேர்தலை போன்று வாக்குச் சாவடிகள் அமைத்து நடைபெற்றது. மேலும் வயதானவர்களை ஆட்டோவில் அழைத்து வந்தும், நடக்க முடியாத பெரியவர்களை தூக்கி வந்தும் வாக்களித்தனர். வரிசையில் நின்று ஆர்வமுடன் விவசாயிகள் வாக்கு அளித்தனர். 

Next Story