ஆனந்த மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா


ஆனந்த மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா
x
தினத்தந்தி 9 May 2022 2:33 AM IST (Updated: 9 May 2022 2:33 AM IST)
t-max-icont-min-icon

ஆனந்த மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்றது

கும்பகோணம்
கும்பகோணம் பெருமாண்டி புது ராம் நகரில் உள்ள ஆனந்த மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி கடந்த 30-ந் தேதி கணபதி ஹோமம், காப்பு கட்டுதல் மற்றும் சிறப்பு மண்டகப்படி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று பகவத் காவிரி படித்துறையிலிருந்து பக்தர்கள் அலகு குத்தியும், சக்தி கரகம், அக்னிசட்டி, பால்குடம் மற்றும் காவடி எடுத்தும் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து ஆனந்த மாரியம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மதியம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 


Next Story