திருமண மண்டபத்தில் மொய்ப்பணம் திருட்டு


திருமண மண்டபத்தில் மொய்ப்பணம் திருட்டு
x
தினத்தந்தி 9 May 2022 2:44 AM IST (Updated: 9 May 2022 2:44 AM IST)
t-max-icont-min-icon

திருமண மண்டபத்தில் மொய்ப்பணம் திருட்டு போனது

கபிஸ்தலம் 
சுவாமிமலையை அடுத்த புளியஞ்சேரியை சேர்ந்தவர் ராஜகோபால். இவர் வெளிநாட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகளின் பூப்புனித நீராட்டு நிகழ்ச்சிக்காக வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் வந்திருந்தார். சுவாமிமலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் அதற்கான நிகழ்ச்சி நேற்று நடந்தது.
 நிகழ்ச்சியில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். மொய்ப்பணத்தை வசூல் செய்ய ராஜகோபாலின் உறவினர் ரவி என்பவரின் தலைமையின் கீழ் 2 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மொய்ப்பணம் வசூலித்துக் கொண்டிருந்தனர்.
மொய்ப்பணம் அபேஸ்
அப்போது ராஜகோபாலின் நண்பர்கள் போல் வந்த சிலர் மொய் பணம் வசூல் செய்யும் இடத்தில் நின்று கண்காணித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மொய்ப்பணம் எழுதிக் கொண்டிருந்த நோட்டு கீழே விழுந்தது. அந்த நோட்டை எடுக்க ரவி கீழே குனிந்த போது மொய்ப்பணம் வைக்கப்பட்டிருந்த பையை நைசாக எடுத்துக் கொண்டு மர்ம நபர்கள் வேகமாக சென்று விட்டனர்.
 மொய்ப்பணம் இருந்த பையை காணாததால் திடுக்கிட்ட ரவி இதுகுறித்து ராஜகோபாலிடம் தெரிவித்தார். அவர் தனது உறவினர்களோடு மர்ம நபர்களை கல்யாண மண்டபம் முழுவதும் தேடிப்பார்த்தனர்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
 ஆனால், அவர்கள் கிடைக்காததால், சுவாமிமலை போலீசில் ராஜகோபால் புகார் அளித்தார். புகாரின்பேரில், சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டதோடு இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். திருமண மண்டபத்தில் மொய்ப்பணம் அபேஸ் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story