நன்னடத்தை உறுதிமொழியை மீறிய ரவுடிக்கு 256 நாள் சிறை
நன்னடத்தை உறுதிமொழியை மீறிய ரவுடிக்கு 256 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திருச்சி,
திருச்சி பாலக்கரை போலீஸ் நிலைய சரித்திர பதிவேடு ரவுடியான ஜஸ்டின் கிருஸ்துராஜ் (வயது 23) பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டார். இதை தடுக்க நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றத்தில் அவரை போலீசார் ஆஜர்படுத்தியபோது, ஒரு ஆண்டுக்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க மாட்டேன் என்று நன்னடத்தை உறுதிமொழியை எழுதி கொடுத்தார். ஆனால் அதை மீறி கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் அவரை, 256 நாட்கள் சிறையில் அடைக்க நிர்வாக செயல்துறை நடுவர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஜஸ்டின் கிருஸ்துராஜ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story