வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 9 May 2022 3:04 AM IST (Updated: 9 May 2022 3:04 AM IST)
t-max-icont-min-icon

கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருச்சி, 
திருச்சி தென்னூர் பகுதியில் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.5 ஆயிரம் பறித்த வழக்கில் குருமூர்த்தி (வயது 20) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையில் இவர் மீது காந்திமார்க்கெட் பகுதியில் நடந்த கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. குருமூர்த்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் எண்ணம் கொண்டவர் என்பதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

Next Story