சேலம் ரெயில்வே கோட்டத்துக்கு 5 விருதுகள்
சிறந்த பராமரிப்பு பணிக்காக சேலம் ரெயில்வே கோட்டத்துக்கு 5 விருதுகள் கிடைத்துள்ளன.
சூரமங்கலம்:-
தெற்கு ரெயில்வேயின் 67-வது ெரயில்வே வார விழா சென்னையில் நடந்தது. விழாவில் சிறப்பாக செயல்பட்ட ரெயில்வே கோட்டங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தெற்கு ரெயில்வே பொது மேலாளர் மல்லையா கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். இதில் வணிக பிரிவின் சிறந்த செயல்பாட்டிற்கான விருதை சேலம் ரெயில்வே கோட்டம், சென்னை கோட்டத்துடன் பகிர்ந்து பெற்று கொண்டது. இதற்கான கேடயத்தை சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீநிவாஸ், கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் பெற்றனர்.
இதேபோல் எலக்ட்ரிக்கல் பிரிவு விருதை கோட்ட முதுநிலை எலக்ட்ரிக்கல் என்ஜினீயர் செல்வமும், இயக்க பிரிவு விருதை கோட்ட முதுநிலை இயக்க மேலாளர் பூபதி ராஜாவும், கணக்கு பிரிவு விருதை கோட்ட முதுநிலை நிதி மேலாளர் மணிகண்டனும், ரன்னிங் ரூமின் சிறந்த பராமரிப்பு விருதை கோட்ட முதுநிலை எலக்ட்ரிக் என்ஜினீயர் (இயக்கம்) ரவி தேஜாவும் பொது மேலாளரிடம் பெற்று கொண்டனர். மேலும் சிறந்த சிக்னல் மற்றும் தொலை தொடர்புத்துறை விருது போத்தனூர் பணிமனைக்கு வழங்கப்பட்டது. மொத்தமாக 5 விருதுகளை சேலம் கோட்டத்திற்கு பெற்று தந்த துறை தலைமை அதிகாரிகள், அலுவலர்களை, சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீநிவாஸ், ரெயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம் ஆகியோர் பாராட்டினர்.
Related Tags :
Next Story