ஆட்டோ டிரைவரிடம் நகை, பணம் மோசடி 3 பெண்கள் மீது வழக்கு


ஆட்டோ டிரைவரிடம் நகை, பணம் மோசடி 3 பெண்கள் மீது வழக்கு
x
தினத்தந்தி 9 May 2022 4:24 PM IST (Updated: 9 May 2022 4:32 PM IST)
t-max-icont-min-icon

ஆட்டோ டிரைவரிடம் நகை, பணம் மோசடி செய்தது தொடர்பாக 3 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே உள்ள துரைச்சாமிபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38). ஆட்டோ டிரைவர். இவரிடம் நிலக்கோட்டை இ.பி. காலனியை சேர்ந்த செந்தில் மனைவி வஞ்சிக்கொடி, அவரது மகள் காயத்ரி தேவி மற்றும் கண்ணன் மனைவி சுதா ஆகிய 3 பேரும் 22 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.
பின்னர் இதை அவர்கள் திரும்ப கொடுக்கவில்லை. எனவே மணிகண்டன் இந்த மோசடி குறித்து நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுத்தையாவிடம் புகார் செய்தார். அதன்பேரில் வஞ்சிக்கொடி, காயத்ரிதேவி, சுதா ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story