குர்லா பகுதிகளில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் பாதிப்பு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 9 May 2022 6:05 PM IST (Updated: 9 May 2022 6:05 PM IST)
t-max-icont-min-icon

குர்லா பகுதிகளில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

மும்பை, 
குர்லா பகுதிகளில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
குடிநீர் வினியோகம் பாதிப்பு
மும்பை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- 
சாக்கி நாக்கா எக்ஸ்பிரஸ் இன் ஓட்டல் முன் உள்ள ராட்சத மாநகராட்சி குடிநீர் குழாயில் வால்வுகள் பொருத்தும் பணி, நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் நாளை  மறுநாள்(புதன்கிழமை) காலை 10 மணி வரை நடைபெற உள்ளது. எனவே, இந்த நேரத்தில் மாநகராட்சி ‘எல்' வார்டில் குர்லா உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில், முழுமையாக குடிநீர் வினியோகம் துண்டிக்கப்படும். 
ஒரு சில பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்படும்.
எந்தெந்த பகுதிகள்
இதில் மாநகராட்சி ‘எல்' வார்டு பகுதியில் உள்ள ஜெரிமெரி, சாந்திநகர், தானாஜிநகர், ஸ்ரீகிருஷ்ணா நகர், சத்யாநகர் பைப்லைன் ரோடு, ஆஷா கிருஷ்ணா பில்டிங், அன்னாசாகர் பில்டிங், திலக்நகர், சாய்பாபா காம்பவுன்ட், டிசில்வா பாக், எல்.பி.எஸ்.நகர், தேசியா நகர், சோனானி நகர், மகாத்மாபுலே நகர், சிவாஜி நகர், அந்தேரி குர்லா மார்க், அனிஸ் காம்பவுன்ட், அம்பிகா நகர், உதய் நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் நாளை மறுநாள் காலை 10 மணி வரை 2 நாட்கள் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும்.
 இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-----

Next Story