ஓடும் ரெயிலில் இருந்து இறங்கிய வங்கி மேலாளர் கால்கள் துண்டாயின
திருச்சியில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முயன்ற வங்கி மேலாளர், தண்டவாளத்தில் விழுந்ததால் அவரது இருகால்களும் சக்கரத்தில் சிக்கி துண்டாயின.
திருச்சி, மே.10-
திருச்சியில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முயன்ற வங்கி மேலாளர், தண்டவாளத்தில் விழுந்ததால் அவரது இருகால்களும் சக்கரத்தில் சிக்கி துண்டாயின.
தனியார் வங்கி மேலாளர்
திருச்சி சுப்பிரமணியபுரம் சுந்தர்ராஜ்நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 40). இவர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
மயிலாடுதுறையில் தங்கி வேலைபார்க்கும் மோகன்ராஜ், விடுமுறை நாளில் மட்டும் ரெயிலில் சொந்த ஊரான திருச்சி சுப்பிரமணியபுரத்திற்கு வருவது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் சென்னையில் இருந்து புறப்பட்ட சோழன் எக்ஸ் பிரஸ் ரெயில் மயிலாடுதுறை ரெயில் நிலையத்துக்கு மதியம் 12 மணிக்கு வந்தது. அந்த ரெயிலில் மோகன்ராஜ் ஏறி திருச்சி வந்தார்.
2 கால்களும் துண்டிப்பு
எக்ஸ்பிரஸ் ரெயில் என்பதால், அந்த ரெயில் பொன்மலை ரெயில் நிலையத்தில் நிற்காது. இந்த நிலையில் பொன்மலை ரெயில்நிலையத்துக்கு பிற்பகல் 2.15 மணிக்கு அந்த ரெயில் மெதுவாக வந்தது. மோகன்ராஜியின் வீடு பொன்மலை அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் உள்ளது. திருச்சி ரெயில் நிலையம் சென்றால் கூடுதல் நேரம் ஆகும் என்பதால், விரைவாக வீட்டுக்கு செல்லும் நோக்கத்தில் மோகன்ராஜ் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கி உள்ளார்.
அப்போது, அவர் தவறி தண்டவாளத்தில் விழுந்தார். இதில் அவரது கால்கள் ரெயில் சக்கரத்தில் சிக்கியது. இதில் முட்டிக்குகீழ் இரு கால்களும் துண்டாயின. இதனால் அவர் வலியால் அலறி துடித்தார்.
தீவிர சிகிச்சை
இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே பாதுகாப்புபடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, அங்கு 2 கால்களும் துண்டிக்கப்பட்டு தண்டவாளம்அருகேஉயிருக்குபோராடிக்கொண்டிருந்த மோகன்ராஜை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரெயில்வே தண்டவாளத்தை கடப்பதும், ஓடும் ரெயிலில் இருந்து இறங்குவதும் ஆபத்தைவிளைவிக்கும் என விழிப்புணர்வு செய்தும் அதை பொதுமக்கள் கடைப்பிடிப்பதில்லை. எனவே, தான் இதுபோன்ற விபத்துகளில் சிக்கி கால் ஊனம், உயிரிழப்பு உள்ளிட்ட சோக சம்பவங்கள் நிகழ்வதாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்தனர். எனவே ஓடும்ரெயிலில் இருந்து இறங்க கூடாது என போலீசார் அறிவுரை வழங்கினர்.

Related Tags :
Next Story