வீதி உலாவில் விமானம் உடைந்து விழுந்து பக்தர் காயம்
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நடைபெற்ற பிரம்மோற்சவ விழாவில் வீதி உலா வந்த ஹேமகோடி விமானம் கேபிள் வயரில் சிக்கி உடைந்து விழுந்ததில் பக்தர் ஒருவர் காயமடைந்தார்.
சோளிங்கர்
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நடைபெற்ற பிரம்மோற்சவ விழாவில் வீதி உலா வந்த ஹேமகோடி விமானம் கேபிள் வயரில் சிக்கி உடைந்து விழுந்ததில் பக்தர் ஒருவர் காயமடைந்தார்.
பிரம்மோற்சவ விழா
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாள் விழாவில் பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மங்கல வாத்தியங்களுடன் சுவாமி கோவில் பிரகாரத்தில் மூன்று முறை வலம் வந்து ஊஞ்சல் சேவை நடைபெற்றது.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட ஹேமகோடி விமானத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வீடுதோறும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபட்டனர்.
உடைந்து விழுந்தது
மாடவீதி உலா நிறைவுப்பெற்று கோவில் சன்னதிக்கு திரும்பியபோது அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகில் கேபிள் ஒயரில் ஹேமகோடி விமானம் மாட்டி விமானம் உடைந்து கீழே விழுந்தது. இதில் ஒருவர் காயமடைந்தார்.
தகவலறிந்ததும் கோவில் உதவி ஆணையர் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து குறித்து கோட்டறிந்தார். அப்போது அவருடன் அய்யங்கார்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோவில் நிர்வாகம் எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் முன்கூட்டியே எடுக்காததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறினர். இந்த விபத்துக்கு முழு பொறுப்பு கோவில் நிர்வாகம் மட்டுமே என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
பின்னர் சுவாமியை கோவில் பிரகாரத்திற்கு கொண்டுவந்தனர். அங்கு பரிகார பூஜை செய்யப்பட்டது.
Related Tags :
Next Story