சாலையில் சுற்றிய கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்
சாலையில் சுற்றிய கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்
ஊட்டி
ஊட்டி நகரில் உள்ள சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிந்து வந்தன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இது தொடர்பாக ‘தினத்தந்தி’ நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இந்த நிலையில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின்பேரில் நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் மேற்பார்வையில் ஊட்டி நகரில் உள்ள சாலைகளில் சுற்றித்திரிந்த கால்நடைகள் பிடிக்கப்பட்டன.
இது தொடர்பாக உரிமையாளர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து கால்நடைகளை சாலைகளில் சுற்றித்திரியவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர்.
Related Tags :
Next Story