100 சதவீத மானியத்தில் 213 பேருக்கு ஆடுகள்


100 சதவீத மானியத்தில் 213 பேருக்கு ஆடுகள்
x
தினத்தந்தி 9 May 2022 7:21 PM IST (Updated: 9 May 2022 7:21 PM IST)
t-max-icont-min-icon

கே.வி.குப்பத்தில்100 சதவீத மானியத்தில் 213 பேருக்கு ஆடுகள் வழங்கப்பட்டது.

கே.வி.குப்பம்

கே.வி.குப்பம் கால்நடை மருத்துவமனை வளாகத்தில், தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், பெண்களை தொழில் முனைவோராக ஆக்கும் திட்டத்தின் கீழ் தலா 5 ஆடுகள் 100 சதவீத மானியத்துடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேலூர் மண்டல கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் கோ.அந்துவன் தலைமை தாங்கினார். 

ஒரு நபருக்கு ரூ.17,500 மதிப்பிலான ஆடுகளும், கொட்டகை பராமரிப்புக்காக ரூ.1,000 வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஒன்றியங்களைச் சேர்ந்த 213 பயனாளிகள் கலந்து கொண்டு ஆடுகளை பெற்றுச் சென்றனர். 

Next Story