கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் வேதியியல் துறை மன்ற கூட்டம்


கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் வேதியியல் துறை மன்ற கூட்டம்
x
தினத்தந்தி 9 May 2022 7:37 PM IST (Updated: 9 May 2022 7:37 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் வேதியியல் துறை மன்ற கூட்டம் நடைபெற்றது.

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி வேதியியல் துறை சார்பாக மன்ற கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை தாங்கினார். வேதியியல் துறை தலைவர் கலைச்செல்வி முன்னிலை வகித்தார். வேதியியல் பேரவை மாணவ செயலாளர் 3-ம் ஆண்டு மாணவி கமல பிரதீபா வரவேற்று பேசினார். திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியின் உடல் அறிவியல் கல்வி இயல் துறை உதவி பேராசிரியை காயத்ரி கலந்து கொண்டு, மின்கழிவு மேலாண்மை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அப்போது, மின் கழிவுகளின் மாசுபாடு, மறுசுழற்சி, மறுபயன்பாடு மற்றும் அவற்றின் முக்கியத்துவம் பற்றி மாணவிகளுக்கு விளக்கி கூறினார். வேதியியல் துறை 2-ம் ஆண்டு மாணவி அஜிநேஷா நன்றி கூறினார்.
நிகழ்ச்சிகளை 3-ம் ஆண்டு மாணவி நிவேதா, 2-ம் ஆண்டு மாணவி மாலதி ஐஸ்வர்யா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
நிகழ்ச்சியில், வேதியியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேரவை செயலாளர் பேராசிரியை ஜான்சிராணி மற்றும் வேதியியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Next Story