தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 9 May 2022 8:50 PM IST (Updated: 9 May 2022 8:50 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆரணி

ஆரணி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35), கூலித்தொழிலாளி. இவருக்கும் ஆரணியை அடுத்த ஆகாரம் கிராமத்தைச் சேர்ந்த புனிதாவுக்கும் 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்வளுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். மணிகண்டனுக்கு தற்போது சரிவர வேலை இல்லாததால், தனது மாமனார் வீடான ஆகாரம் கிராமத்திலேயே தங்கி இருந்தார்.
கடந்தசில மாதங்களாகவே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த மணிகண்டன் 5-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டுக் கொண்டார். அவரை அங்கிருந்தவர்கள் உயிருடன் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி மணிகண்டன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீரராகவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story