சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 May 2022 8:57 PM IST (Updated: 9 May 2022 8:57 PM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை
சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஓய்வுகால உதவித்தொகை பெறும் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு முறையான ஓய்வூதியம் நிர்ணயம் செய்து அகவிலைப்படி வழங்க வேண்டும். சத்துணவு அங்கன்வாடி திட்டத்தில் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு பெற்ற ஊழியர்களுக்கு அரசாணையின்படி முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் மாலினி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் கமலநாதன், துணைத் தலைவர் ஜோதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேம்பு மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
இதேபோல் சீர்காழி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஒன்றிய தலைவர் கணபதி தலைமை தாங்கினார். ஒன்றிய துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி, ஒன்றிய செயலாளர் துரை நடராஜன், செயற்குழு உறுப்பினர் சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சந்திரா, மாவட்ட துணைத்தலைவர் சுசீலா, மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Next Story