ஒலிமாசு விஷயத்தில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை பின்பற்ற வேண்டும்; மந்திரி அரக ஞானேந்திரா பேட்டி
ஒலிமாசு விஷயத்தில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை பின்பற்ற வேண்டும் என போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கூறினார்.
பெங்களூரு:
போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
முஸ்லிம் மசூதிகளில் ஒலிப்பெருக்கி மூலம் பிரார்த்தனை ஒலிபரப்பப்படுகிறது. அதே போல் தற்போது சில இந்து அமைப்புகள் சுப்ரபாத நிகழ்ச்சியை ஒலிப்பெருக்கியில் ஒலிபரப்பு செய்கிறார்கள். இதனால் ஒலி மாசு ஏற்படுகிறது.
ஒலி மாசு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும். ஒலி மாசுவை கட்டுப்படுத்த அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். சட்டத்தை கையில் எடுப்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க தயங்காது. கோர்ட்டு உத்தரவுகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அரக ஞானேந்திரா கூறினார்.
Related Tags :
Next Story