கடையின் முன்பு மது குடித்ததை தட்டிக்கேட்டவர் மீது கும்பல் தாக்குதல்


கடையின் முன்பு மது குடித்ததை தட்டிக்கேட்டவர் மீது கும்பல் தாக்குதல்
x
தினத்தந்தி 9 May 2022 9:32 PM IST (Updated: 9 May 2022 9:32 PM IST)
t-max-icont-min-icon

காட்பாடி காந்திநகரில் கடை முன்பு மது குடிப்பதை தட்டிக்கேட்ட இளைஞரை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கிய காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.

காட்பாடி

காட்பாடி காந்திநகரில் கடை முன்பு மது குடிப்பதை தட்டிக்கேட்ட இளைஞரை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கிய காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.


கடை முன்பு இளைஞர்கள் மது குடிப்பு

காட்பாடியை அடுத்த ஒட்டந்தாங்கல் பகுதியை சேந்தவர் கோவிந்தன். இவர் காந்திநகர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் வேலை செய்து வருகிறார். மாலை கோவிந்தன் கடைக்கு வந்தார். அப்போது கடையின் முன் 5 இளைஞர்கள் அமர்ந்து மது அருந்திக்கொண்டு இருந்தனர். இதனை கோவிந்தன் தட்டிகேட்டார். இதனால் கோவிந்தனிடம் அவர்கள் தகராறில் ஈடுபட்டனர்.

இளைஞர் மீது தாக்குதல்

தகராறு முற்றியதில் கோபம் அடைந்த இளைஞர்கள் 5 பேரும் சேர்ந்து கோவிந்தனை சராமரியாக தாக்கினர். கோவிந்தனின் அலறல் சத்தத்தை கேட்டதும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். இதனைப் பார்த்ததும் மது போதையில் இருந்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து ஓட்டம்பிடித்தனர்.

கும்பல் தாக்கியதில் காயம் அடைந்த கோவிந்தனை பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

சமூக வலைதளத்தில் வெளியானது

இந்த சம்பவம் குறித்து கோவிந்தன் விருதம்பட்டு போலீசில் புகார் அளித்தார். போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆராய்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இந்த மோதல் சம்பவம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story