மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை
மோர்தானா அணை பகுதியில் மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
குடியாத்தம்
ஆற்காடு ராமசாமி தெருவைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 59) கூலித்தொழிலாளி. இவரது மனைவி பானுப்பிரியா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான சண்முகம் மது குடித்து விட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் ஊர் ஊராக சுற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் குடியாத்தத்தை அடுத்த மோர்தானா அணை பகுதியில் மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு மயங்கி நிலையில் சண்முகம் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
இதனை கண்ட அந்த பகுதி பொதுமக்கள் 108 ஆம்புலன்சை வரவழைத்து சண்முகத்தை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் சண்முகத்தை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சண்முகத்தின் மகன் பிரவீன் குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story