தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க போராட்டக்குழு சாலை மறியல்


தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க போராட்டக்குழு சாலை மறியல்
x
தினத்தந்தி 9 May 2022 9:46 PM IST (Updated: 9 May 2022 9:46 PM IST)
t-max-icont-min-icon

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க போராட்டக்குழுவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தேனி: 

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலமுறை ஊதியம், தொகுப்பு ஊதியம் பெறுபவர்களுக்கு நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பொது வினியோக திட்டத்துக்கு தனி துறை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி பங்களாமேடு பகுதியில்  சாலை மறியல் நடந்தது. 

இதற்கு நியாயவிலைக்கடை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பொன்அமைதி தலைமை தாங்கினார். இந்த சாலை மறியலால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 34 பெண்கள் உள்பட 186 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தேனியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Next Story