அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
மடத்துக்குளம்,
தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஓய்வூதியர் சங்கத்தின் மடத்துக்குளம் கிளை சார்பாக ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் மின்னல்கொடி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் கருணாநிதி மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதில், தமிழ்நாடு அரசு ஓய்வூதிய விதிகளின்படி ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும். அகவிலைப்படியுடன், குடும்ப ஓய்வூதியமும் வழங்க வேண்டும். மாதம் ரூ.300 மருத்துவப்படியும், காப்பீடும் வழங்க வேண்டும். மாதாந்திர ஓய்வூதியம் மாதத்தின் முதல் தேதியில் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story