விளையாட்டு வீரர்கள் ஆடுகளம் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் கலெக்டர் தகவல்


விளையாட்டு வீரர்கள் ஆடுகளம் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 9 May 2022 9:57 PM IST (Updated: 9 May 2022 9:57 PM IST)
t-max-icont-min-icon

விளையாட்டு வீரர்கள் ஆடுகளம் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்

கடலூர்

சான்றிதழ்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், விளையாட்டு வீரர்கள் விளையாட்டு செய்திகளை தெரிந்து கொள்வதற்கும், விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்கும், இனி வருங்காலங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலியான "TN SPORTS "ஆடுகளம் செயலிலை பதிவிறக்கம் செய்து பயன்பெற வேண்டும். விளையாட்டு வீரர், வீராங்கனைகள் (தனிநபர்), (குழு) மற்றும் பயிற்றுனர்கள் பதிவு செய்து பயன்பெறலாம்.
இந்த செயலியை பதிவிறக்கம் செய்வதற்கு விளையாட்டு வீரர்களின் இமெயில் முகவரி, மொபைல் எண், பிறந்த தேதி மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களை குறிப்பிட்டு பதிவேற்றம் செய்ய வேண்டும். இனி வருங்காலங்களில் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்பவர்கள் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் இந்த செயலியில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே digi locker மூலம் வழங்கப்பட உள்ளது.

பள்ளி மாணவர்கள்

ஆகவே கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டு சங்கங்கள் மற்றும் விளையாட்டில் ஆர்வமுள்ள பொதுமக்கள் அனைவரும் உடனடியாக "TN SPORTS " ஆடுகள செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட தகவலை கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story