சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கம்பம்:
கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வட்ட கிளை செயலாளர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும், சத்துணவு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் வழங்கப்படும். மேலும் நிலுவையில் உள்ள கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த ேதர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர் சங்கம் மாவட்ட தலைவர் பேயத்தேவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் தேனி நகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் தாஜுதீன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story