கடலூரில் கருப்பு பட்டை அணிந்து பொதுமக்கள் போராட்டம் மனித கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு
கடலூரில் கருப்பு பட்டை அணிந்து பொதுமக்கள் போராட்டம் மனித கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு
கடலூர்
போராட்டம்
பண்ருட்டி நகராட்சி 1-வது வார்டு பகுதியை சேர்ந்த வி.ஆண்டிக்குப்பம் பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்தினர்.
அப்போது, வி.ஆண்டிக்குப்பம் பகுதியில் நீர் நிலைகளை அழித்து, விவசாயத்தை பாதிக்கும் வகையில் பண்ருட்டி நகராட்சி நிர்வாகம் மனித கழிவு கசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஏற்பாடு செய்து வருகிறது. இந்த சுத்திகரிப்பு நிலையம் வந்தால், கோவில் திருவிழா நடத்த முடியாது. பொதுமக்கள் துர்நாற்றத்தால் அவதிப்படுவார்கள்.
மாற்ற வேண்டும்
ஆகவே சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றி, தற்போது உள்ள இடத்தை எவ்வித மாற்றமும் செய்யாமல் அப்படியே திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றனர்.
இதை அறிந்த போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலெக்டரை சந்தித்து மனு அளிக்குமாறு கூறினர். அதன்படி முக்கிய நிர்வாகிகள் சென்று கலெக்டரை சந்தித்து மனு அளித்து விட்டு சென்றனர். இருப்பினும் இந்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story