வட்டமலை கரை ஓடை அணையிலிருந்து பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறப்பு
வட்டமலை கரை ஓடை அணையிலிருந்து பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறப்பு
வெள்ளகோவில்:
வெள்ளகோவில், உத்தமபாளையம் கிராமத்தில் உள்ள வட்டமலை கரை ஓடை அணையிலிருந்து பாசனத்திற்காக 2-வது முறையாக தண்ணீர் திறந்து விடக்கோரி செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம், வட்டமலை கரை ஓடை அணை பாசன நீர் பயன்படுத்துவோர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நடவடிக்கையின் பேரில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வட்டமலை கரை ஓடை அணையிலிருந்து இடது மற்றும் வலது பிரதான கால்வாய்களின் படுகையில் பாசன பகுதியில் உள்ள நீர்நிலை பயிர்களை காப்பாற்றும் பொருட்டும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும், தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இத்தகவலை வட்டமலை கரை ஓடை நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் சி.பாலபூபதி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story