கர்நாடகத்தில் புதிதாக பள்ளிகளில் 7 ஆயிரம் வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை-முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை


கர்நாடகத்தில் புதிதாக பள்ளிகளில் 7 ஆயிரம் வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை-முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
x
தினத்தந்தி 9 May 2022 10:18 PM IST (Updated: 9 May 2022 10:18 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் 2 நாட்கள் நடைபெற்ற கலெக்டர்கள் மாநாடு நிறைவடைந்த நிலையில், கர்நாடகத்தில் புதிதாக பள்ளிகளில் 7 ஆயிரம் வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்

பெங்களூரு: பெங்களூருவில் 2 நாட்கள் நடைபெற்ற கலெக்டர்கள் மாநாடு நிறைவடைந்த நிலையில், கர்நாடகத்தில் புதிதாக பள்ளிகளில் 7 ஆயிரம் வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

கலெக்டர்கள் மாநாடு

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் மாவட்ட கலெக்டர்கள் மாநாடு பெங்களூரு விதான சவுதாவில் நேற்று தொடங்கியது. அந்த மாநாடு இன்று  2-வது நாளாக நடைபெற்றது. இதில் நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள், பொதுப்பணித்துறை மந்திரி சி.சி.பட்டீல், மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார், சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ், தலைமை செயலாளர் ரவிக்குமார், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரிகள் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டை 2 நாட்கள் நடத்தினேன். இதில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. சாலைகள் மேம்பாடு, பள்ளி, ஆஸ்பத்திரிகள் மேம்பாடு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினேன். அதிகாரிகள் நேர்மையாக பணியாற்ற வேண்டும் என்றும், திட்ட பணிகளை விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளேன்.

தூய்மை பணிகள்

7 ஆயிரம் வகுப்பறைகள், 4 ஆயிரம் அங்கன்வாடி மையங்கள், ஏழைகளுக்கு வீடுகள் கட்டி கொடுத்தல், தூய்மை பாரத திட்ட பணிகள், கிராமப்புற வேலை உறுதி திட்ட பணிகள் குறித்த காலத்தில் செய்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறேன்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Next Story