ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட வன விவசாயிகள், மலைவாழ் மக்கள், நாட்டு மாடுகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி:
தேனி பங்களாமேட்டில், தேனி மாவட்ட வன விவசாயிகள், மலைவாழ் மக்கள், நாட்டு மாடுகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கடமலை-மயிலை ஒன்றியத்தின் வனப்பகுதியில் பல தலைமுறையாக குடியிருக்கும் மக்களை வனத்தைவிட்டு வெளியேற்றக் கூடாது, வனப்பகுதியில் ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கான தடையை அகற்ற வேண்டும், விவசாய நிலங்களுக்கும், குடியிருப்புகளுக்கும் பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணவாளன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பெருமாள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன் மற்றும் நிர்வாகிகள், வன விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story