மஞ்சுவிரட்டில் மாடு முட்டி ெதாழிலாளி பலி


மஞ்சுவிரட்டில் மாடு முட்டி ெதாழிலாளி பலி
x
தினத்தந்தி 9 May 2022 10:40 PM IST (Updated: 9 May 2022 10:40 PM IST)
t-max-icont-min-icon

மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் ெதாழிலாளி பலியானார்.

திருப்பத்தூர்,

மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் ெதாழிலாளி பலியானார்.

மாடு முட்டி தொழிலாளி சாவு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கீழையப்பட்டி கிராமத்தில் உள்ள விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 400-க்கும் மேற்பட்ட காளைகள் கண்மாய் பகுதிகளிலும் வயல்வெளி பகுதிகளிலும் கட்டு மாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் மாடு முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 
மேலும் சிராவயல்புதூரைச் சேர்ந்த கணேசன் (வயது 57) என்பவர் மாடு முட்டியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். துணி தைக்கும் தொழிலாளியான அவரது உடல் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

5 பேர் மீது வழக்கு

இந்த சம்பவம் குறித்து நாச்சியாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். மேலும் உரிய அனுமதி பெறாமல் மஞ்சுவிரட்டு நடத்தியதாக சிராவயல் புதூர் கிராம நிர்வாக அலுவலர் கணேஷ் கிருஷ்ணகுமார் கொடுத்த புகாரின் பேரில் கீழையபட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் (65), தேனப்பன் (50), நாச்சியப்பன் (58), குமார் (57) பழனிசாமி (58) உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்

Next Story