மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்; வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்; வாலிபர் பலி
x
தினத்தந்தி 10 May 2022 12:00 AM IST (Updated: 9 May 2022 10:46 PM IST)
t-max-icont-min-icon

நாகூரில் மோட்டார் சைக்கிள்-மொபட் மோதி கொண்ட விபத்தில் வாலிபர் பலியானார்.

நாகூர்:
நாகூர் அருகே ஒக்கூர் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த முருகவேல் மகன் சத்தியராஜ் (வயது 23) கூலி தொழிலாளி. இவர் நேற்று கங்களாங்சேரி சாலையில் மேல வாஞ்சூரை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே நரிமணம் தெற்கு தெருவை சேர்ந்த சுந்தரமூர்த்தி (52) என்பவர் ஓட்டி வந்த மொபட்டும், சத்தியராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் படுகாயம்  அடைந்த சத்தியராஜ்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த  நாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சத்தியராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரமூர்த்தியை கைது செய்தனர்.


Next Story