விழுப்புரம் மாவட்டத்தில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
மூத்த குடிமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும், 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்த வருவாய் கிராம ஊழியருக்கு பென்ஷன் ரூ.6,750-ம், 5 ஆண்டுகள் பணி நிறைவு செய்த வருவாய் கிராம ஊழியர்களுக்கு பென்ஷன் ரூ.3,375-ம் மற்றும் இதர பலன்களை வழங்க வேண்டும், கிராமப்புற கோவில் பூசாரிக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாநிலம் தழுவிய அளவில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் காணை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஒன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும், ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் தலைவர் சரோஜா தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் கோலியனூர், ஒலக்கூர், மயிலம், வல்லம், மேல்மலையனூர், வானூர் ஆகிய இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Related Tags :
Next Story