அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 May 2022 10:54 PM IST (Updated: 9 May 2022 10:54 PM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கண்டாச்சிமங்கலம், 

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் தியாகதுருகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் மணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பூமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் தயாபரன் வரவேற்றார். மாவட்ட தலைவர் கொளஞ்சி வேலு கலந்து கொண்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஈட்டிய விடுப்பு மற்றும் 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பணி மேற்பார்வையாளர் சீனிவாசன், கணக்காளர்கள் அண்ணாதுரை, சுதாகர், உதவியாளர் அமுதா, கணினி உதவியாளர் ராஜா, உறுப்பினர்கள் கோவிந்தசாமி, முருகன், புவனேஸ்வரி, சங்கீதா, வைத்தியநாதன், குப்புசாமி மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார தலைவர் கணேசன் நன்றி கூறினார்.

Next Story