குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
கம்பம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உத்தமபாளையம்:
கம்பம் அருகே க.புதுப்பட்டி பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இந்த பகுதியில் லோயர்கேம்ப் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைப்பு ஏற்பட்டதால் கடந்த சில நாட்களாகவே குடிநீர் வினியோகம் சீராக நடைபெறவில்லை.
இந்த நிலையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் க.புதுப்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story