நாமக்கல் மாவட்டத்தில் 54 ஊராட்சிகளில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்-இன்று நடக்கிறது
நாமக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் இன்று 54 ஊராட்சிகளில் நடைபெற இருப்பதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.
நாமக்கல்:
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சிறப்பு முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2021-2022-ம் ஆண்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 54 கிராம ஊராட்சிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
நாமக்கல் வட்டாரத்தில் வசந்தபுரம், வகுரம்பட்டி, சிவியாம்பாளையம் ஊராட்சிகளிலும், புதுச்சத்திரம் வட்டாரத்தில் ஏழூர், திருமலைப்பட்டி, கதிராநல்லூர் ஊராட்சிகளிலும், சேந்தமங்கலம் வட்டாரத்தில் வாழவந்திகோம்பை, நடுக்கோம்பை கிராமங்களிலும், எருமப்பட்டி வட்டாரத்தில் ரெட்டிப்பட்டி, காவக்காரன்பட்டி, மேட்டுப்பட்டி ஊராட்சியிலும், மோகனூர் வட்டாரத்தில் ராசிபாளையம், ஓலப்பாளையம், ஆரியூர் ஊராட்சிகளிலும், கொல்லிமலை வட்டாரத்தில் வளப்பூர் நாடு, பைல்நாடு, வாழவந்தி நாடு, குண்டூர் நாடு ஊராட்களிலும் சிறப்பு முகாம் நடக்கிறது.
பயிர்க்கடன்
ராசிபுரம் வட்டாரத்தில் முத்துகாளிப்பட்டி, சந்திரசேகரபுரம், குருக்கபுரம் ஊராட்சிகளிலும், நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் கார்கூடல்பட்டி, ஊணாந்தாங்கல் ஊராட்களிலும், வெண்ணந்தூர் வட்டாரத்தில் குமாரபாளையம், தொட்டிய வலசு, மதியம்பட்டி ஊராட்சிகளிலும், திருச்செங்கோடு வட்டாரத்தில் தோக்கவாடி, கருவேப்பம்பட்டி, ஓ.ராஜாபாளையம், ஆனங்கூர், தேவனாங்குறிச்சி, சிறுமொளசி ஊராட்களிலும், பள்ளிபாளையம் வட்டாரத்தில் தட்டான்குட்டை, எலந்தக்குட்டை, காடச்சநல்லூர் ஊராட்களிலும், எலச்சிபாளையம் வட்டாரத்தில் கொன்னையார், சத்திநாயக்கன்பாளையம், உஞ்சனை, அகரம், இலுப்புளி, பொம்மம்பட்டி ஊராட்சிகளிலும், மல்லசமுத்திரம் வட்டாரத்தில் மல்லசமுத்திரம் மேல்முகம், கருமனூர், மங்கலம், மரப்பரை, ராமாபுரம், பாலமேடு ஊராட்களிலும், பரமத்தி வட்டாரத்தில் மேல்சாத்தம்பூர், நடந்தை, ராமதேவம், கோதூர் ஊராட்களிலும், கபிலர்மலை வட்டாரத்தில் பிலிக்கல்பாளையம், ஏ.குன்னத்தூர், இருக்கூர் ஆகிய 54 கிராம ஊராட்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
இந்த சிறப்பு முகாம்களில் பயிர்க்கடன் வழங்குதல், விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்குதல், பயிர் காப்பீடு குறித்து விளக்கப்படும். மேலும் கால்நடைகள் நலன் பேண சிறப்பு முகாம் நடத்துதல் மற்றும் அந்தந்த துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்கள் பற்றி பல்வேறு துறை அலுவலர்களால் எடுத்து கூறப்பட உள்ளது. எனவே அனைத்து விவசாயிகளும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story